தமிழகத்தைச் சார்ந்த பொன்செல்வன் அவர்களுக்கு கோல்டன் விசா அமீரகத்தில் வழங்கி கௌரவிக்கப்பட்டது. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 25 March 2024

தமிழகத்தைச் சார்ந்த பொன்செல்வன் அவர்களுக்கு கோல்டன் விசா அமீரகத்தில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


தமிழகத்தைச் சார்ந்த பொன்செல்வன் அவர்களுக்கு கோல்டன் விசா அமீரகத்தில் வழங்கி கௌரவிக்கப்பட்டது, அன்வர் பிசினஸ் மேன் சர்வீசஸ் இன் தலைமை அலுவலகத்தில், துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவரும், ஆராய்ச்சித்துறை இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வனுக்கு அன்வர் குழுமங்களின் வர்த்தக ஒருங்கிணைப்பாளர் அலி சயீத் அலி புத்தவில் அல் மத்ரூசி 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கி கவுரவிக்கப்பட்டது.


நிகழ்வில் அன்வர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன், பி.எம்.குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கனகராஜா, புதுவை ஸ்டாய் தொலைக்காட்சி, தமிழக குரல் இணையதள வளைகுடா முதல்மை நெறியாளர் கமல் கேவிஎல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இதன் மூலம் பேராசிரியர் பிரிவின் கீழ் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை டாக்டர் சித்திரை பொன்செல்வன் பெறுகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad