ஐக்கியா அரபு அமீரக துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அதன் தலைவி முனைவர் ஷீலா தலைமையில் துபாய் சுகாதார மையம் ஆதரவோடு இரத்த தானம் முகாம் துபாயில் உள்ள இரத்த தான மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
புனித ரமலான் மாதத்தில் நடைபெற்ற இரத்த தான முகம் காலை 11.30 மணிமுதல் நடைபெற்றது இந்த இரத்த தான முகாமில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர். அமீரக தமிழ் சங்கம் சார்பில் நடத்திய இந்த இரத்த தான நிகழ்ச்சியில் அமீரக வசிக்கும் இந்திய தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த இரத்த தான முகாம் அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி ஷீலா தலைமையில்
சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்று இரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த இரத்த தான முகாமிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய துபாய் சுகாதார மையத்திற்கும், துபாய் அரசுக்கும் மற்றும் சமூக ஊடகங்களுக்கும் அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி ஷீலா மற்றும் நிர்வாகிகள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
- kamalkvl dubai
No comments:
Post a Comment