ஐக்கிய அரபு அமீரக துபாயில் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் மத நல்லிணக்க இஃப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாய் கராமா பகுதியில் உள்ள ஸ்டார் ஆம்பூர் பிரியாணி உணவகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தேமுதிக அமீரக பிரிவு துபாய் செயலாளர் Kamalkvl தலைமையில், தேமுதிக அமீரகபிரிவு துணைச் செயலாளர் அம்ஜத் அலி, சாகுல் ஹமீத், செல்வம் சேகர், கார்த்திகேயன், இளைஞர் அணி கிருஷ்ணா அருணாச்சலம், தங்க வடிவேலு, கடலூர் மாவட்டம் கேப்டன் சிவா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் செயலாளர்கள் காரல் மார்க்ஸ், துபாய் முத்தமிழ் சங்கம் தலைவர் ஷா, நிர்வாகிகள் ஷாஹுல் ஹமீது, பாளையங்கோட்டை ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா, தங்கதுரை, அதிமுக அமீரக பிரிவு செயலாளர் ரவிசந்திரன், நிர்வாகி டொனால்ட், அதிமுக மகளீர் அணி தலைவி ஷமீம் பானு, தேசிய தமிழ் நாளிதழ் தினகுரல் வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா, A2B ராஜு மந்திரி, டிக்டாக் புல்லிங்கோ குழுவின் அயாஸ், நியாஸ் எமிரேட்ஸ் நியான் உஸ்மான் அலி, மதுரை பிரியாணி நிறுவனர் பாலா, முத்தமிழ் பாலு, குடவாசல் ஃபஹாத், வணக்கம் பாரதம் வார இதழ் வளைகுடா நிருபர் தஸ்லீம், உள்ளிட்ட ஏசியா புக் சாதனை தமிழ் பாடகி மிருதுளா, அன்புக்குடும்பம் மீனு உள்ளிட்ட ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
வந்திருந்த அனைவருக்கும் தேமுதிக அமீரகப் பிரிவு செயலாளர் kamalkvl நன்றி உரையாற்றி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment