துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இரத்ததான முகாம் - அமீரக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 4 March 2024

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இரத்ததான முகாம் - அமீரக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு.


ஐக்கிய அரபு அமீரக துபாயில் அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுவரும் துபாய் முத்தமிழ் சங்கம் ஈவென்ட்ஸ் நிறுவனம் சார்பில் இரத்ததான முகாம் துபாயில் உள்ள லத்திஃபா மருத்துவமனை இரத்த தான பிரிவில் நடைபெற்றது 200-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள், 


இந்நிகழ்ச்சி முத்தமிழ் சங்க தலைவர் ஷா, தலைமையில், சேர்மன் ராமசந்திரன், துணை சேர்மன் பிரசாத் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக கேப்டன் கேப்டன் தொலைக்காட்சி புதுவை ஸ்டார் தொலைக்காட்சி தமிழக குரல் வளைகுடா நெறியாளர் kamalkvl, சமியுக்தாபவன் நிறுவனர் ராமமூர்த்தி, மதுரை பிரியாணி உணவகம் பாலா, தினகுரல் தேசிய தமிழ் நாளிதழ் முதன்மை நிருபரும், வணக்கம் பாரதம் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, கிரீன் குளோபல் நிறுவனர் சமூக சேவகி, முனைவர் ஜாஸ்மின், அல்மாசா, பெண்கள் அமைப்பு பொதுச்செயலாளர் சனியோ, ஆசிய சாதனை அமீரக பாடகி மிருதுளா ரமேஷ், லக்ஷிமி பிரியா, இன்ஸ்டா பிரபலம் தஸ்லீம், மீனா மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மேலும் இந்த இரத்த தான முகாமில் எதிபார்த்ததைவிட நூற்றுக்கும் மேற்பட்ட அதிகமானோர் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியை முத்தமிழ் சங்க நிர்வாகிகள் பாளையங்கோட்டை ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா, கீழை ஷாஹுல் ஹமீது, தங்கதுரை உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.


- Kamalkvl Dubai Tamilagakural Media.  

No comments:

Post a Comment

Post Top Ad