ஐக்கிய அரபு அமீரக துபாயில் தமிழ் நாடு குடவாசல் பகுதியை சேர்ந்த அல்ஹாஜிரா புட் டிரேடிங் நிறுவனத்தின் நிறுவனர் இக்பால் அவரின் மகள் வழி பேரகுழந்தைக்கு பெயர் சூடும் நிகழ்ச்சி துபாயில் உள்ள ரெடிசன் ப்ளூ 5 ஸ்டார் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் மார்க்க ஆலிம் இறைவசனம் ஓதி சிறப்பு பிரார்த்தனை செய்து குழந்தையின் காதில் இஸ்லாமியர்களின் தொழுகை அழைப்பான பாங்கு சொல்லி தாய், தந்தை அப்துல் ஜப்பார் ஹாஜிரா பேகம் மற்றும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த குடும்பத்தார்கள், ஊர் உறவினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் "அப்துல் ஹஃபிஸ்" என்ற பெயரை சூடி குழந்தை நலமோடு வாழ துவா செய்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கேப்டன் தொலைக்காட்சி, புதுவை ஸ்டார் தொலைக்காட்சி, தமிழக குரல் இணையதள செய்தி நிறுவன வளைகுடா முதன்மை நெறியாளர் kamalkvl மற்றும் தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் வளைகுடா தலைமை நிருபரும், வணக்கம் பாரதம் தமிழ் வார இதழ் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தை "அப்துல் ஹஃபிஸ்" நோய் நொடியில்லாமல் நூறாண்டுகள் வாழ வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment