ஐக்கிய அரபு அமீரகதில் சல்வா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் பகவதி ரவி நேரடிபார்வையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தமிழக பாடகி, பாடகர்களைக் கொண்டு செயல்பட்டுவரும் சல்வா ம்யூசிக் குழுமத்தின் உலக சாதனை படைக்கும் முயற்சியாக குழுமத்தில் இருக்கும் ஆண், பெண் பாடகர்கள் சல்வா மியூசிக் நிறுவனர் பகவதி ரவி உள்பட பாடகிகள் வள்ளி, ம்ருதுளா ரமேஷ், ஜனனி மற்றும் பாடகர்கள் கோகுல் பிரசாத், ஆகியோர்களை கொண்டு துபாயில் உள்ள SNG ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் அரங்கில் 24 மணிநேரமும் இடைவிடாமல் தமிழ் திரைப்பட பாடல்கள் பாடி Asia Book of Record என்ற ஆசியா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உலக சாதனை படைத்துள்ளனர்.
இந்நிகழ்ச்சி தமிழ் நாட்டில் இருந்து வந்திருந்த ஆஸ்கார் நாயகன் இசைபுயல் ஏஆர் ரஹ்மான் சகோதரி படகி மற்றும் இசை இயக்குனர் ரைஹானா மற்றும் சல்வா குரூப் நிறுவனர் முனைவர் பகவதி ரவி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக முத்தமிழ் சங்கம் தலைவர் ஷா, சேர்மன் ராமசந்திரன், தமிழ் கில்லி எப்எம் நிறுவனர் முனைவர் கனகராஜா, கேப்டன் தொலைக்காட்சி, புதுவை ஸ்டார் தொலைக்காட்சி தமிழக குரல் இணையதள செய்தி நிறுவன வளைகுடா நாடுகளின் முதன்மை நெறியாளர் தினக்குரல் நாளிதழ் வணக்கம் பாரதம் இணை ஆசிரியர் நஜீம், அன்வர் குரூப் நிறுவனர் அன்வர், GV ப்ரோடக்சன் பிரசாத் ஈமான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், முத்தமிழ் சங்க நிர்வாகிகள், கீழை ஷாஹுல் ஹமீது, பாளையங்கோட்டை ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா, தங்கதுரை, அமீரக தமிழ் சங்க தலைவி ஷீலா, குறும்பட இயக்குனர் ஆண்ட்ரியா, அமீரக பெண்கள் சங்க நிர்வாகி சானியோ, UTS ரமேஷ், துபாய் புல்லிங்கோ ஷாநவாஸ், ஜனனி, எல்லா தமிழ் ராவூப், உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று சாதனை படைத்த அத்துணை சாதனையாளர்களுக்கு துபாய் முத்தமிழ் சங்கத்தின் சார்பாக பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment