துபாய் மார் 08- ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் Spread Smile's நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்ற வாவ் சீசன்-2 மகளிர் தின கொண்டாட்டம்.
இந்த நிகழ்வில் அமீரகம் மற்றும் இந்தியாவிலிருந்து பல மாநிலத்தைச் சார்ந்த தனித்திறமையுடைய மாற்றுத்திறனாள குழந்தைகளின் கலை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் அமீரகத்தில் வசிக்கும் இந்திய தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தொழிலதிபர்களை வரவழைத்து அவர்களுக்கான அங்கீகாரம் அளித்து மேலும் தனித்திறமையாளர்கள் அனைவருக்கும் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ் சினிமா நடிகை இனியா, ஆயிர்வேதா டாக்டர் ஷிவானி சர்மா, டாக்டர் பியூட்டி கேர் நிறுவனர் டாக்டர் சைமா, பல் டாக்டர் வித்யா பாலாஜி, டோக்கியோ தமிழ் சங்க தலைவர் ஹரி, மேலும் அமீரக சிறப்பு விருந்தினார்களாக கேப்டன் தொலைக்காட்சி புதுவை ஸ்டார் தொலைக்காட்சி தமிழக குரல் வலைதள வளைகுடா முதன்மை நெறியாளர் kamalkvl, அமீரக தமிழ் சங்க தலைவி ஷீலு, தினகுரல் நாளிதழின் வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, கள்ளக்குறிச்சி சின்னா, இன்ஸ்டா தஸ்லீம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக Spread Smile's நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
- Kamalkvl Dubai
No comments:
Post a Comment