ஐக்கிய அரபு அமீரகத்திலும் தமிழகத்திலும் பல சமூக சேவைகள் செய்துவரும் கிரீன் குளோப் நிறுவனம் சார்பில் துபாயில் உள்ள பொன்னுசாமி தமிழ் உணவக நிகழ்ச்சி ஹாலில் கிரீன் குளோப் நிறுவனர் சமூகசேவகி முனைவர் ஜாஸ்மின் தலைமையில் முத்தமிழ் சங்கம் தலைவர் ஷா, கேப்டன் தொலைக்காட்சி புதுவை ஸ்டார் தொலைக்காட்சி தமிழக குரல் செய்தி இணையதள வளைகுடா முதன்மை நெறியாளர் காமல், அல் வஹா குரூப் சிஇஒ சர்புதீன், ஈமான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சி பயிற்சி நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினார்களாக முத்தமிழ் சங்க நிர்வாகிகள், கீழை ஷாஹுல் ஹமீது, பாளையங்கோட்டை ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா, தங்கதுறை ஆகியோறும், தினகுரல் நாளிதழ் வளைகுடா நிருபரும் வணக்கம் பாரதம் வாரஇதழ் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, நஜிமா அல் பரீதா நிர்வாகி அபுதாஹிர், துபாய் தர்பார் கபீர், கடற்கரை பாண்டியன், லாபிங் கிளப் நிர்வாகி சமீர், எஸ்பிஎஸ் நிஜாம், திமுக திருநாவுக்கரசு, காங்கிரஸ் சிந்தா, ட்ராவல் ஜோண் சேக், எல்லா தமிழ் ராவூப், புதுயுகம் சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஊடகவியாளர்கள் மற்றும் பார்வையாளர்களாக ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இதனை பற்றி கிரீன் குளோப் நிறுவனர் முனைவர் ஜாஸ்மின் கூறும்போது இப்பேச்சி பயிற்சி முகாம் சிறியவர் முதல் பெரியவர் வரை மேடை பயமின்றி தமிழ் மொழியில் சிறப்பாக பேசுவதற்கு இது ஒரு சிறந்த தளமாக இருக்குமென்றும், இப்பயிற்சி முகாம் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு விதமாக பட்டிமன்ற பேச்சி, விவாத பேச்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் நடைபெறுமென்றும் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி சிற்றுண்டி கொடுத்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment