துபாயில் தெலுங்கு திரைதுறையின் நந்தி விருது வழங்கும் பத்திரிக்கை சந்திப்பு நடைபெற்றது துபாய் பிப்.25- ஐக்கிய அரபு அமீரக துபாயில் ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற தெலுங்கு திரைப்படம் மற்றும் வணிகசபை வழங்க இருக்கும் "நந்தி விருதுகள்" பிரமாண்ட விழா பற்றிய பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஊடகவியாளர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி Spread Smile's ஈவென்ட்ஸ் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா தொகுத்து வழங்க துபாயில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தெலுங்கு திரைத்துறை சார்பாக நடிகர் சுமன், தெலுங்கனா திரைத்துறை வணிகசபை தலைவர் லயன் டாக்டர் பிரதணி ராமகிருஷ்ணன் கௌடு, பிணு சார்லி ஆகியோர் கலந்துகொண்டு நந்தி விருதுகள் வழங்கும் விழாவின் நிகழ்ச்சிநிரல் பத்திரிகையை நடிகர் வெளியிட்டு வந்திருந்த அணைத்து ஊடகவியளர் மற்றும் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்தார்.
இந்நிகழ்ச்சியில் கேப்டன் தொலைக்காட்சி, புதுவை ஸ்டார் தொலைக்காட்சி, தமிழக குரல் இணையதள செய்தி நிறுவன முதன்மை நெறியாளர் உள்ளிட்ட பல ஊடகவியளர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment