ஐக்கிய அரபு அமீரக துபாயில் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற "Business Excellence" விருது நிகழ்ச்சி துபாய் அல் பர்சா பகுதியில் பர்சா மில்லினியம் ஹைட் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அமீரகத்தைசேர்ந்த இந்திய தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் தொழிமுனைவோர்களுக்கு ஆண்டுதோறும் Tamil Forum என்ற அமைப்பு சார்பாக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். அதுபோன்று இந்த வருடம் 2024 ஆண்டிற்கான விருது இந்திய தொழிலதிபர் ராணா குழும நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பிஎஸ்எம் குழும நிறுவனம் நிறுவனர் உட்பட பல்வேறு தொழில்முனைவோர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் (Digital) ஊடக சேவையாற்றி வரும் தமிழ் தேசிய நாளிதழ் தமிழக குரல் பத்திரிக்கையின் சிறந்த செய்தி சேவையை பாராட்டி எமது பத்திரிக்கையின் வளைகுடா தலைமை நிருபர் Kamalkvlவிற்கு எமது பத்திரிக்கையின் அங்கீகாரமாக சிறந்த ஊடகவியலாளர் விருது அமீரகத்தைசேர்ந்த அல் அலி குரூப் நிறுவனத்தின் தலைவர் மாண்புமிகு யாகூப் அலி வழங்கி கௌரவித்தார்.
இது பற்றி தமிழக குரல் நிறுவனர் திரு வினோத் குமார் அவர்கள் கூறுகையில் கடல் கடந்து அயல் நாடுகளில் எங்களது தமிழக குரல் நாளிதழுக்கு அங்கீகாரம் கொடுத்து இந்த விருதினை வழங்கிய தமிழ் ஃபோரம் அமைப்பின் தலைவர் பொன்ராஜ் டேனியல் மற்றும் செயலாளர் செந்தில்நாதன் ஆகியோருக்கு தமிழக குரல் நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.
No comments:
Post a Comment