துபாயில் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற "Business Excellence" விருது-2024. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 2 July 2024

துபாயில் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற "Business Excellence" விருது-2024.


ஐக்கிய அரபு அமீரக  துபாயில்  தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற "Business Excellence" விருது  நிகழ்ச்சி துபாய் அல் பர்சா பகுதியில் பர்சா மில்லினியம் ஹைட் ஸ்டார் ஹோட்டலில் தமிழ் மன்றம் தலைவர் பொன்ராஜ் டேனியல் மற்றும் செயலாளர் செந்தில் தலைமையில்  அரேபியா ஹோல்டரிங்ஸ் மற்றும் பிஎஸ்எம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனர் மற்றும் சேர்மன் பிஎஸ்எம் ஹபீபுல்லா கான், அமீரகத்தசேர்ந்த அல் அலி குரூப் நிறுவனத்தின் தலைவர் யாக்கூப் அலி, அமீராக வழங்கறிஞர் பதர் அல் கமீஸ், அமீரக தொழிலதிபர் முஹம்மது அலி பலூஷி, இந்தியாவை சேர்ந்த ரானா நிறுவன தலைவர் ரானா, DNA திரைப்பட நடிகர் அஸ்கர் சௌதான் மற்றும் நடிகை டாக்டர் ஹன்னா ரெஜி ஜோஷி  ஆகியோர் முன்னிலையில். ஜோமினா ஜிபின்  தொகுத்து வழங்க  சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் பிஎஸ்எம் ஹபீபுல்லா கானின் நீண்ட கால தொழில்துறை மற்றும் சமூக சேவையை பாராட்டி தமிழ் ஃபோரம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் வழங்கி கௌராவிக்கப்பட்டது.


மேலும் பஞ்சாப் ரெஸ்டாரண்ட்  மஜீந்திர சிங்க், தல்வீந்தர் சிங்க், UTS UAE தமிழ் சங்கம் ரமேஷ், ரெஸ்கேர் ஹோம் ஹெல்த் கேர் நிர்வாகிகள் ரம்ஜத் சேக், TEPA அமைப்பின் தலைவர் முனைவர் பால் பிரபாகர், தர்ஷன் சிங்க் ராணா, சுகிஷ் கோவிந்தன், ஆர்யா சுமேஷ், பாராக் ரெஸ்டாரண்ட், ராஜேஷ் தங்கராஜ், சீனி பஹுரூதீன், முஹம்மது ஆசிப், மாசூமா அஜாஸ், நர்மதா பிரகாஷ், முனீர் அஹ்மத், செல்வகணபதி, ராமசுப்பிரமணியன், உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கி கௌராவிக்கப்பட்டது. மேலும் தமிழக குரல் நாளிதழ் சேவையை பாராட்டி சீல்டு வழங்கப்பட்டது, துபாய்  ஈமான் அமைப்பு ஹமீது யாசினுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.


மேலும் அமீரகத்தில் ஊடக சேவையாற்றி வரும்  தமிழக குரல், புதுகை ஸ்டார் தொலைக்காட்சி கேப்டன் தொலைக்காட்சி முதன்மை நெறியாளர் Kamalkvl, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார, இதழ் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா ஆகியோருக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


மேலும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு உபசரித்து அமைப்பின் செயலாளர் செந்தில்  நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad