அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும் Digital Journalism இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 11 June 2024

அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும் Digital Journalism இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

அபுதாபி அய்மான் சங்கம்  நடத்தும்  Digital Journalism இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ஜுன் 09, 2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 08 மணி முதல் 09 : 30 மணி வரை‌ கூகுள் மீட் ஆன்லைன் வாயிலாக மிகச்  சிறப்பாக நடைப்பெற்றது.

அமீகத் தாய்ச் சபை அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் கண்ணியத்திற்குரிய கீழக்கரை  H. M. முஹம்மது ஜமாலுதீன் ஹாஜியார் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார்கள்.


அய்மான் சங்க சர்வதேச ஒருங்கிணைப்பாளர் சகோதரர் காயல்பட்டினம் எஸ்.ஏ.சி ஹமீத் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சியின் துவக்க மாக ஆண்டவனின் அருள்மறை திருக்குர்ஆன் திருவசனங்களை ஓதி இளவல் காயல் அப்துல் கைய்யூம் அவர்கள் தொடங்கினார்கள்.


விழாவின் வரவேற்புரையை அய்மான் பைத்துல் மால் பொதுச் செயலாளர் பார்த்திபனூர்  நிஜாம் மைதீன் அவர்கள் நிகழ்த்தினார்கள். அய்மான் டிஜிட்டல் மீடியாவின் திட்ட இயக்குனர்  பேராசிரியர் டாக்டர் முஹம்மது அஸ்கர் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.


பைத்துல் மால் தலைவர் அதிரை A. சாகுல் ஹமீது ஹாஜியார், தமிழ்நாடு ஸ்டேட் உருது அகாடமி துணைத் தலைவர் டாக்டர் நயீமுர் ரஹ்மான் சாகிப், அய்மான் சங்கத் துணைத் தலைவர்கள் ஆவை A. S. முகம்மது அன்சாரி, காதர் மீரான் பைஜீ, சர்வதேச அமைப்பாளர் A. அப்துல் ரஹ்மான்  ரப்பானி  உள்ளிட்போர் விழா வாழ்த்துரை வழங்கினார்கள்.


தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் திரு. சமஸ் அவர்களும், சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் தங்க ஜெய சக்திவேல் அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்கள். அதனைத் தொடர்ந்து  அய்மான் டிஜிட்டல் மீடியாவின் முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர்  அவர்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள் ,தமிழக குரல் நாளிதழ் வளைகுடா முதன்மை நெறியாளர் Kamalkvl காணொளி மூலமாகவும் கலந்து கொண்டார், விழாவின் இறுதியாக அய்மான் சங்க நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை S. முஹம்மது அப்துல் காதர் அவர்கள் நன்றிவுரை நிகழ்த்தினார்கள்.


அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள், அய்மான் டிஜிட்டல் மீடியாவின் முன்னாள் மாணவர்கள், மற்றும் அபுதாபியில் வசிக்கக்கூடிய தமிழ் சொந்தங்கள்  ஏராளமானோர் இர் நிகழ்ச்சியில்   கலந்து கொண்டு சிறப்பித்தனர். துஆவோடு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. இச்சிறப்புமிக்க விழாவினை இசைமுரசு FM ல் நேரலை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad