துபாயின் டெய்ராவில், அல் முத்தீனா எனும் பகுதியில் வசித்துவரும் புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியை சேர்ந்த பொறியாளர் திரு. பிரதாப் அழகு தன் சிறு வயது முதல் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி அமீரக துபாயில் சிறப்பான அந்த பயிற்சிகளை தானும் பயின்று மத்தவங்களுக்கும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் பிரதாப் அழகு, தன் விரலால் 22.66 கிலோ எடை உள்ள ஜிம் உபகரணங்களை வெறும் கட்டை விரல் நுகத்தை பயன்படுத்தி தூக்கி (Finger nail Weight Lifting), சாதனை படைத்துள்ளார்.
முந்தைய சாதனையாளர் தூக்கிய 22.5 கிலோ எடையினை முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார். இந்த நிகழ்வில் தமிழக குரல் செய்தி நிறுவன வளைகுடா முதன்மை நெறியாளர் முன்னிலையில் நடைபெற்றது. மற்றும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சூழ்ந்து நின்று கரம் ஓசை எழுப்பி இந்த உலக சாதனையை நிக்கலத்தினார், இந்த உலக சாதனையை தமிழர் ஒருவர் செய்திருக்கின்றார் என்பது பெருமையோடு உலகத்துக்கு கொண்டு சேர்க்கின்றோம்..
தமிழக குரல் செய்திகளுக்காக துபாயிலிருந்து Kamalkvl.
No comments:
Post a Comment