துபாய், நவ. 17 -
கடந்த 8ம் தேதி கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராபர்ட் புரூஸ் வழங்கிய சிறப்பு அங்கீகார விருந்தில் தொழில் அதிபர் உஸ்மான் அலி அவர்கள் துபாயில் பெருமையுடன் கௌரவிக்கப்பட்டார். தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் சங்கம் (TEPA) வழங்கிய TEPA – வழிகாட்டி விருது இந்த விழாவில் உஸ்மான் அலி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கப்பட்டதைப் பற்றிப் பேசும் அவர்,
“08 நவம்பர் 2025 அன்று கிடைத்த இந்த விருது, என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும். இது மக்களுக்கு சேவை செய்வதில் எனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த பெருமைக்குரிய விருதிற்கு தகுதி பரிந்துரை செய்த டாக்டர் பால் பிரபாகர் மற்றும் முழு TEPA சமூகத்திற்கும் அவர் நன்றியை தெரிவித்தார்.
சமூக சேவையை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் அதிக உற்சாகத்துடன் செயல்படுவேன் என்றும் கூறினார்.


No comments:
Post a Comment