ஐக்கிய அரபு அமீரக துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா பிறந்தநாள் அதிமுக அமீரக பிரிவு சார்பில் கடந்த 24ம் தேதி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சி அதிமுக அமீரக பிரிவு செயலாளர் கே ரவிச்சந்திரன் தலைமையில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் விவேகானந்தன், அம்மா பேரவை செயலாளர் எம் சரவணன், இளைஞர் அணி செயலாளர் சந்தோஷ், மகளிரணி செயலாளர் கிருத்திகா. அதிமுக தலைவி பானு. ஆகியோர் முன்னிலையில் முத்தமிழ் சங்க தங்கதுரை தொகுத்து வழங்க நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக துபாய் ஈமான் சமூக அமைப்பின் பொதுச் செயலாளர் கீழக்கரை ஹமீத் யாஸீன், தேமுதிக அமீரக பிரிவு செயலாளரும் தமிழக குரல் தொலைக்காட்சி தமிழக குரல்நாளிதழ் வளைகுடா முதன்மை நெறியாளர்kamalkvl, அமீரக தமிழ்ச்சங்க தலைவி டாக்டர் ஷீலூ, முத்தமிழ் சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், ஷாஹுல் ஹமீத், துபாய் புல்லிங்கோ டிக்டாக் புகழ் புள்ளிங்கோ ஷானவாஸ், புல்லிங்கோ அயாஸ் மற்றும் நிர்வாகிகள், மீடியா7 அஸ்கர், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் வளைகுடா தலைமை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, அமீரக தமிழக வெற்றி கழகம் ரகு மற்றும் இஸ்மாயில் , தேமுதிக அமீரகபிரிவு துணைச் செயலாளர் சாகுல் ஹமீத். தேமுதிக அமீரக பிரிவு மகளிர் அணி செயலாளர் வகிதா பானு.ஆர் மீடியா ராஷித், மீடியா தாஹிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் தமிழ் நாட்டில் இருந்து இணையவாயிலாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அமீரக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் பிறந்தநாள் உரையாற்றி தன்னுடைய மகிழ்ச்சியினை பரிமாறிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment