ஐக்கிய அரபு அமீரக துபாயில் மால் ஆப் எமிரட்ஸ் என்றழைக்கப்படும் பிரபலமான மாலில் உள்ள கிம்பன்ஸ்கி ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற தமிழ் நாட்டைச்சேர்ந்த டாக்டர்களின் அமைப்பான சர்வதேச தமிழ் டாக்டர் அமைப்பின் ஐக்கிய அரபு அமீரக பிரிவு சார்பில் நடைபெற்ற "சிகரம் தொடு தமிழா" என்ற தொழில்முனைவோர் ஊக்கம் மற்றும் AI செயல்பாடு பற்றி விரிவாக்க நிகழ்ச்சி TDI இயக்குனர் டாக்டர் ஹக்கிம், TDI பொதுச்செயலாளர் டாக்டர் சிவகுமார் மற்றும் TDI நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. (AI) என்பது செயற்கை நுண்ணறிவு கணினிகள் பல்வேறு மேம்பட்ட செயல்பாடுகளைச் செய்ய உதவும் தொழில்நுட்பங்களின் தொகுப்பாகும். TDI UAE அத்தியாயம் சந்திப்பு சிகரம் தொடு தமிழா AI ஹெல்த்கேர் இநிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக Rev. ஃபாதர் அருள் ராஜ், நிறுவனர் DMI, MMI, KMMCH மற்றும் சிறப்பு விருந்தினராக DMI குரூப் பல்கலைக்கழக தலைவர் டாக்டர் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டார்.
மேலும் RISE - UAE ஒருங்கிணைப்பாளர் ஆல்பிரட் பெர்க்மான்ஸ், RISE அமைப்பின் UAE இயக்குனர் டாக்டர் பஷீர், RISE - UAE பொதுச்செயலாளர் மோகன்ராஜ், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மேலும் மீடியா சார்பாக தமிழககுரல் நாளிதழ் தமிழக குரல் தொலைக்காட்சி வளைகுடா முதல்மை நெறியாளர் Kamalkvl, தினகுரல் தேசிய தமிழ் நாளிதழின் வளைகுடா முதன்மை நிருபரும் வணக்கம் பாரதம் வார இதழின் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, UTS ரமேஷ் விஸ்வநாதன் ஆகியோருடன் பல்வேறு பிரபலமான தமிழ் டாக்டர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்நிகழ்விற்கு விஜய் டிவி பிரபலமும் நடிகருமான புகழ் தமிழ் நாட்டில் இருந்து விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மருத்துவ துறையில் AI செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்கள் மேலும் அதன் குறை நிறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. நிறைவாக TDI இயக்குனர் டாக்டர் ஹக்கிம் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment