ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் புள்ளிங்கோ என்ற டிக் டாக் குழுமத்தின் தமிழ் இளைஞர்கள் நடத்திய மக்கள் இசை விருந்து 2 - 2024 மற்றும் கலை நிகழ்ச்சி துபாயில் உள்ள ஜெம்ஸ் பிரைவேட் பள்ளியில் உள்ள உள்ளரங்கில் ஆர்ஜே மாயா மற்றும் VJ சமீர் கான் தொகுத்து வழங்க சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினரோடு பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் கானா பாடல்களால் கலக்கிக்கொண்டிருக்கும் கானா பாடாகர் பிரபலமான கானா பாலா, கானா இசைவாணி, கானா சுதாகர், கானா மைக்கல், கானா வினோத், ஜூனியர் நித்யா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக KRG நிறுவனத்தின் நிறுவனரும் பிரபல தயாரிப்பாளருமான கண்ணன் ரவி, இமான் சமூக அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், தமிழக குரல் தொலைக்காட்சி நாளிதழ் வளைகுடா முதல்மை நெறியாளர் kamalkvl , ஹோப் சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் குறும்பட இயக்குனருமான கௌசர், குறிஞ்சி உணவக நிறுவனர் ரமேஷ், தமிழகத்தின் தேசிய நாளிதழ் தினகுரல் வளைகுடா நிருபரும் வணக்கம் பாரதம் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, மீடியா 7 அஸ்கர், சாம்கோ இவன்ட் நிறுவனர் சமீம், சமூக சேவகர் மண்ணை சுரேஷ் உள்ளிட்டோரும் மேலும், பொதுமக்கள் பலர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை துபாய் புல்லிங்கோ ஷாநவாஸ் , புல்லிங்கோ ஹயாஸ், புல்லிங்கோ ஜனனி உள்ளிட்டோர் மற்றும் துபாய் டிக்டாக் புல்லிங்கோ குழுவினர்கள் இப்ராஹிம், ஸ்ரீ, ரிச்சர்ட், பெர்னி, மற்றும் நியாஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது மேலும் துபாய் கேகே நடனக்குழுவினரின் நடன நிகழ்ச்சி, சல்வா மியூசிக் குழுவினரின் பாடல்கள் மற்றும் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சியில அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
No comments:
Post a Comment