அபுதாபியில் காலமான வீரமங்கலம் குமார் கணேசன் உடலை தாயகம் அனுப்பித் தந்த தாய்ச் சபை அபுதாபி அய்மான் சங்கம் - தமிழககுரல் - வளைகுடா நாடுகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 22 June 2024

அபுதாபியில் காலமான வீரமங்கலம் குமார் கணேசன் உடலை தாயகம் அனுப்பித் தந்த தாய்ச் சபை அபுதாபி அய்மான் சங்கம்


அபுதாபியில் காலமான வீரமங்கலம் குமார் கணேசன் உடலை தாயகம் அனுப்பி வைத்தனர், இது குறித்து தாய்ச் சபை அபுதாபி அய்மான் சங்க நிர்வாகிகள் குறியதாவது, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் வீரமங்கலத்தைச் சேர்ந்த குமார் கணேசன் இம்மாதம் 10ம் தேதி வேலை தேடி அமீரகத் தலைநக அபுதாபி வந்தடைந்தார். அதிர்ச்சியளிக்கும் விதமாக அமீரகம் வந்தடைந்த அடுத்த நாள் (ஜூன் 11ம் தேதி) மாரடைப்பால் காலமானார்.


மறைந்த குமார் கணேசனின் உடலை தாயகம் அனுப்பித் தருமாறு, குமார் கணேசனின் குடும்பத்தினரும் நண்பர்களும் அமீரகத் தாய்ச் சபை அய்மான் சங்கத்தை அணுகினர். மறைந்த சகோதரரின் உடலை தாயகம் அனுப்பவதற்கான ஏற்பாடுகளை செய்து  தருமாறு தமுமுக அபுதாபி மண்டல பொருளாளர் எமனேஸ்வரம் சர்புதீன் கேட்டுக் கொண்டதன் பேரில் அனைத்து தூதரகப் பணிகளையும் அய்மான் சங்கத் தலைவர் கீழக்கரை எச்.எம் முகம்மது ஜமாலுதீன் ஆலோசனையின் பெயரில், மறைந்த குமார் கணேசனின் நண்பர் சென்னை இர்பான் தாஜுதீன் அவர்களுடன்  இணைந்து தேவையான அனைத்து காரியங்களையும் அய்மான் சங்க நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் (MAK)  நிறைவு செய்தார்.


அனைத்து பணிகளும் நிறைவு பெற்றதையடுத்து, இன்று 21/06/2024 இரவு அபுதாபி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்  விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு  மறைந்த சகோதரரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. மறைர்க குமார் கணேசனின் குடும்பத்தாரும் நண்பர்களும் தமது உளமார்ந்த நன்றிகளை அய்மான் சங்கத்திற்கு தெரிவித்துக் கொண்டார்கள்.


அன்னாரின் இறுதி காரியங்களை நிறைவேற்றுவதற்கு உழைத்த பொதுச் செயலாளர் லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி,செயற்குழு உறுப்பினர்கள் ஆடுதுறை முஹம்மது அனஸ், கட்டுமாவடி தஸ்தகீர் இப்ராஹிம், அம்பகரத்தூர்  முஹம்மது கைசர், திருநெல்வேலி முகம்மது உசைன், கீழக்கரை சையது பாசில் அவர்களுக்கும், மேலும் அய்மான் சங்கத்தின்  அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


மேலும் குமார் கணேசனின் உடலை தாயகம் அனுப்புவதற்கான முழு செலவையும் ஏற்ற அபுதாபி இந்திய தூதரகத்திற்கும், மிக துரிதமாக  முழு ஒத்துழைப்பு வழங்கிய  அபுதாபி இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி உயர்திரு பாலாஜி ராமசாமி  அவர்களுக்கும் அய்மான் சங்கம் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது, என அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad