புனித ரமலான் மாதத்தில் நடைபெற்ற இரத்த தான முகம் இரவு 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.30 மணிவரை நடைபெற்றது இந்த இரத்த தான முகாமில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.
துபாய் புல்லிங்கோ நடத்திய இந்த இரத்த தான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கேப்டன் தொலைக்காட்சி, புதுவை ஸ்டார் தொலைக்காட்சி தமிழக குரல் இணையதள வளைகுடா முதன்மை நெறியாளர் kamalkvl, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் வளைகுடா முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, Canway Migrates சிஇஒ ராஜேஸ்வரி, ரெஸ்கேர் ஹோம் ஹெல்த் கேர் நிறுவனர் ரம்ஜத், எல்லா தமிழ் ராவூப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் தமிழகத்தின் நம்பிக்கை 2024 விருது பெற்ற திருமதி ராஜேஸ்வரி மதிவண்ணன் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தார்.
துபாய் புல்லிங்கோ அமைப்பின் நிறுவனர் ஷாநவாஸ் தலைமையில் புல்லிங்கோ ஜனனி, சமீர், ஸ்ரீ, ரிச்சர்ட், சல்வா, மஹசும், இபுரஹீம், நியாஸ்தீன், தௌபிக் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்று இரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த இரத்த தான முகாமிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய துபாய் சுகாதார மையத்திற்கும், துபாய் அரசுக்கும் மற்றும் சமூக ஊடகங்களுக்கும் துபாய் புல்லிங்கோ குழுவினர் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது
No comments:
Post a Comment